பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2014

டுவிட்டரில் ரசிகர்களை குசிப்படுத்தும்   நெய்மார் 
கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர், டுவிட்டர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தையொட்டி, பிரேசிலின் நெய்மரை வாழ்த்தி 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் 1.22 கோடி டுவிட்களை டுவிட்டர் இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.
பிரேசில்லிகுரோஷியா ஆட்டம் நடைபெற்ற 90 நிமிடங்களில் பதிவான டுவிட்களின் எண்ணிக்கையானது, கடந்த மாதம் நடைபெற்ற ரியல் மாட்ரிட்லிஅட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின்போது பதிவான 84 லட்சம் டுவிட்களை விட 50 மடங்கு அதிகமாகும்.
போர்ச்சுகலின் ரொனால்டோவை டுவிட்டரில் 2.70 கோடி பேர் தொடர்கிறார்கள். இது, போர்ச்சுகல் நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.