பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2014


இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை: விசாரணைக் குழுவில் பதிலளிக்க பொன்சேகா முடிவு .சரத் பொன்சேகாவுக்கு மேலேயும் கத்தி தொங்குவதால் தடம் புரள்கிறார் 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவிற்கு பதிலளிக்க தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இணையத்தளமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் யுத்தம் இடம்பெற்றவேளை எனது தலைமையிலே முன்னெடுக்க்பபட்டது. எனவே சர்வதேச விசாரணைக்குழுவினர் என்னிடமே முதலில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இராணுவத்தினர் எந்தவொரு போர்க்குற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இது தொடர்பில் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் சென்று பதிலளிக்க நான் தயாராக உள்ளேன்.
எந்தவொரு குழு இலங்கைக்கு வந்தாலும் பயப்படத் தேவையில்லை. அந்த குழுவுக்கு பதிலளிக்க நான் தயார். யுத்தம் தொடர்பான எந்தவொரு பொறுப்பையும் ஏற்க நான் தயார் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சர்வதேச விசாரணைக்குழுவினர் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டார்கள் என்றே அர்த்தப்படுத்தப்பட்டுவிடும்.
எனவே விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.