பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2014

விபூசிகா,ஜெயக்குமாரி வழக்கு; ஆதாரம் சேர்க்க திகதி குறிப்பு 
news
 பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு ஆதாரம் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தினால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. 

 
இவ்விருவர் சார்பில் வி.சுஷன்திரப்பிரகாசம் நிரஞ்சன் என்ற  சட்டத்தரணி இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
 
இவ்விரு மனுக்கள் தொடர்பாக நேற்று ஆராயப்பட்ட போதே நீதியரசர்கள் மனுக்கள் மீது ஆதாரம் சேர்ப்பதற்காக ஜுன் 6ஆம் திகதியை குறித்துள்ளனர்.