பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2014

யாழில்.இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு 
 யாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
குமாரசாமி கிருபாகரன் (30 வயது) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
 
குறித்த இளைஞன் உரும்பிராயைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை காதலித்ததையடுத்து இருவருக்கும் திருமணம்
நிச்சயிக்கப்பட்டது.
 
ஓகஸ்ட் 17 ஆம் திகதி திருமணத்திற்கு திகதியும் குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
 
இந்நிலையில் குறித்த இளைஞனின் கைத் தொலைபேசிக்கு இனந்தெரியாதவர்கள் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்
விடுக்கும் வகையில் பயமுறுத்தி வந்துள்ளனர்.
 
இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்தபோதிலும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
 
நேற்றும் தொலைபேசியில் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தன் தாயாரிடம் தெரிவித்தபோது அதற்கு 
பயப்படவேண்டாமென தாய் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் இன்று ஆலயத்திற்கு சென்ற பின்னர் மகன் தூக்கில் தொங்கிக் கிடக்கிறார் எனக் கிடைத்த 
தகவலையடுத்தே அந்த இளைஞனின் தாயார் அங்கு சென்றுள்ளார்.
 
 இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.