பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2014


 விஜய் பிறந்தநாள்: நாளை கோவை இ.எஸ்.ஐ. யில்
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
நடிகர் விஜய்யின் 40–வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நகர விஜய் இளைஞரணி தலைமை விஜய் நற்பணி இயக்கம் சார்பில் கோவையில்
நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.

நகர இளைஞர் அணி தலைவர் கோபி தலைமையில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 108 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
காலை 10 மணிக்கு பட்டணம் குழந்தைகள் இல்லத்தில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. அதன் பின்னர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

மாலை 6 மணிக்கு ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வருகிற 29–ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடக்கிறது. அடுத்த மாதம் 6–ந் தேதி முதியோர் இல்லத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.
பின்னர் மரக்கன்றுகள் நடப்படுகிறது. 13–ந் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச முழு உடல் பரிசோதனை முகாம், 40 திருநங்கைகளுக்கு இலவச சேலை வழங்கும் விழா நடைபெறுகிறது.