பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2014

நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார் பான் கீ மூன் 
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பான் கீ மூன் ஆதரிப்பதாக
தெரிவித்துள்ளார்.

இறுதி சமாதானத்துக்காக மனித உரிமைகளை மதித்தல் உட்பட்ட உள்நாட்டு பொறிமுறைகளை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நியூயோர்க்கில் செய்தியாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றும் போதே பான் கீ மூனின் உதவி பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை குறிப்பிட்டுள்ளார்.