பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2014


வடமாகாண சபை இணையத்தளம் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது
வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ தளமான www.np.gov.lk   என்ற இணையத்தளம் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது.
மேற்படி இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை  ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இயங்கியது.
இந்நிலையிலேயே மீண்டும் அந்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
 குறித்த இணையத்தளத்தினை உபயோகப்படுத்துவது, ஆளுநர் அலுவலகம் என்றும் அவர்களிடம் கேட்டால் தான் இதற்குரிய காரணம் தெரியும் என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
இந்தநிலையில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் இது தொடர்பில் தங்களுக்குத் எதுவும் தெரியாது எனப் பதிலளித்துள்ளது.