பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2014

சட்டவிரோத கடற்பயணம்:இலங்கையர் நால்வர் கைது 
 சட்டவிரோதமாக படகொன்றில் சரியான ஆவணங்களின்றி இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கையை சேர்ந்த 02  பெண்கள்
உட்பட 04 பேரை இன்று கைதுசெய்துள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டதாக விசாரணையின்போது இவர்கள் கூறியதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கெனடி கூறியுள்ளார். 
 
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த இவர்கள் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். சாந்தி மலர் சபேஷ் சுப்பையா ஆகிய இந்த 04 பேரும் தனுஷ்கோடிக்கு அப்பாலான அரிச்சல்முனை மண்கும்பி மீது விடுவதற்காக  தலா 20000 ரூபா படி படகுக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 
 
மேலும் இந்திய கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்யப்பட்ட பின்னர் இவர்கள் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.