பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2014

13 ஆவது திருத்தத்தை விரைவில் செயற்படுத்த பா.ஜ.க. நடவடிக்கை; இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வி.கே.சிங்தெரிவிப்பு 
பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள்
மேற்கொண்டு வருகின்றது.
 
இலங்கையுடனான உறவுகளை மதித்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதாக இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங்தெரிவித்துள்ளார்.
 
சார்க்நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் குறித்த இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் மேலும் கூறுகையில்;
இலங்கையுடனான உறவுகளை இந்தியா பெரிதும் மதிக்கிறது. அண்மையில் இலங்கையுடனான இரு தரப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட எல்லாப் பரப்புகளிலும், இருதரப்பு நலன்கள் விரிவடைந்துள்ளன.
 
தமிழ்ச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தேசிய நல்லிணக்க செயல் முறைகளை விரைவுபடுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர் விவகாரத்துக்கும் அப்பால், முக்கியமான விவகாரங்களில் ஒன்றான 13 ஆவது திருத்தச்சட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் நடை முறைப்படுத்துவதற்கும் இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.