பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2014


சென்னை கட்டிட விபத்து: ஆந்திராவை சேர்ந்த 14 பேர் கதி என்ன?
ஆந்திர மாநிலம் விஜயநகரம் துணை கலெக்டர் கோவிந்தராஜூலு சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,


’’விஜயநகரத்தில் இருந்து 39 பேர் மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட பணிக்கு வந்தனர். இதில் 15 பேர் கட்டிட விபத்தில் இறந்துள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். மீதி உள்ள 14 பேர்களை பற்றி விவரம் தெரியவில்லை.
அவர்கள் கட்டிட இடி பாடுகளில் சிக்கியுள்ளார்களா? அல்லது இறந்தவர்களில் அடையாளம் தெரியாத வர்களின் பட்டியலில் இருக்கிறார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்’’என்று கூறியுள்ளார்.