பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூலை, 2014


குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் 31வது ஆண்டு நினைவு தின நிகழ்வு
1983ம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு அஞசலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இவ்வஞ்சலி நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட். மாவட்ட காரியாலயத்தில் அமைப்பின் மாவட்ட செயலாளர் குணசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர்களுமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா), பிரசன்னா இந்திரகுமார் மற்றும் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உப செயலாளர் சற்குணராசா (திலக்), அம்பாறை மாவட்ட செயலாளர் லோகநாதன் (நாதன்), அமைப்பின் மூத்த உறுப்பினரான பிரபு மற்றும் ஏனைய உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தளபதிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்மாலை அணிந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, மிகவும் எளிமையான முறையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அதிதிகளினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.