பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2014

ஆணைக்குழுவிற்கு முன்னால் 45பேர் இன்று சாட்சியம்; 85புதிய பதிவுகளும் ஏற்பு 
வடக்கு கிழக்கில் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 


அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய விசாரணைகள்  மாலை 5மணிக்கு முடிவடைந்தன. கரைதுறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமசேவர் பிரிவிவுகளைச் சேர்ந்த 60 பேர் இன்றைய தினம் ஆணைக்குழுவால் விசாரணைக்கு என அழைக்கப்ட்டிருந்தனர்.

எனினும் அவர்களில் 45 பேர் மட்டுமே காணாமற்போன தமது உறவுகள்  குறித்து சாட்சியமளித்தனர். இதன்போது 2007,2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  காணாமல் போனவர்கள்  தொடர்பிலும் இராணுவம் மற்றும்  விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் சாட்சியமளித்தனர்.

அத்துடன் 85 பேர் தமது உறவுகளை யுத்தகாலத்தில் காணவில்லை என புதிய முறைப்பாட்டினை ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளனர். இன்றை விசாரணை நடைபெறும் பிரதேச செயலகத்திற்கு புலனாய்வாளர்கள்  வருகை தந்து மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டனர். அத்துடன் வந்திருந்தவர்களை புகைப்படம் எடுப்பதிலும் முனைப்புக் காட்டினர். இதனால் மக்கள்  அச்சத்துடன் இருந்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது.

இருப்பினும் குறித்த விடயம் குறித்து வடக்கு மாகாண அவையின் உறுப்பினர். து.ரவிகரன் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  மேலும் நான்காம் நாளான நாளைய தினம் காலை 9.30 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

இதற்காக பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் சாட்சியப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். நாளை ஒரு மணியளவில் நிறைவு  பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் புதுக்குடியிருப்பில் காணாமல் போனவர்கள் 54 பேர் சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.