பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூலை, 2014

ஒரே ரயிலில் சட்டவிரோதமாக பயணித்த 49 அகதிகள்
ஜேர்மனியின் மூனிச் நகரில் கடந்த திங்கள் கிழமை இரவு இத்தாலியில் இருந்து சட்டவிரோதமாக இரயில் மூலம் 49 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், ஜேர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், கடந்த யூன் மாதத்திலிருந்து சட்டவிரோதமாக வந்த 600க்கும் மேற்பட்ட அகதிகளை மத்திய இரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அகதிகள் பெரும்பாலும் போரில் பாதிக்கபட்ட சிரியா மற்றூம் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து தான் அதிகம் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வந்துள்ள 49 அகதிகளில் 35 பேர் சிரியாவிலிருந்தும், மற்ற பலர் நைஜீரியா, சோமாலியா, காம்பியா மற்றும் எரிட்ரியாவிலிருந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் தங்கவைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.