பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2014


இந்தியா தனது வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியது  
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, இந்தியாவின் புதிய அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்  நோக்கில், இந்தியாவின் புதிய அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே  இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையானது இலங்கை ரூபா மதிப்பில் 1080 கோடி ரூபாவாகும்.
அபிவிருத்தி பணிகளுக்காக இந்தியா, இலங்கைக்கு வழங்கி வரும் நிதியுதவியை அதிகரிக்க நரேந்திர மோடியின் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்துள்ளது.
ஏனைய நாடுகளுக்காக செயற்படுத்தப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிதி, இலங்கை வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இது பற்றி தெரியவந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.