பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2014


வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நொச்சிமோட்டை பகுதியில் உள்ள அபாயகரமான வளைவொன்றில் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டவேளை, வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த வான் மரமொன்றுடன் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.