பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூலை, 2014


தனியார் பேரூந்துகளில் அனுமதி இன்றி தொலைக்காட்சி சேவை 
^' தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பும் வானொலிப்பெட்டிகளை அகற்றவுள்ளதாக தனியார் பேரூந்து போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்  சி.பி. ரட்னாயக்க,
தற்போது நாட்டில் பரவலாக அனேகமான தனியார் பேரூந்துகளில் அனுமதி இன்றி தொலைக்காட்சி சேவை நடாத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் மேலும் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசைகள் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டால்  அது தொடர்பில் 0716550000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடும் படி அவர் தெரிவித்துள்ளார்.