பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2014

தமிழ் மக்களை இராணுவத்தை போன்று ஈ.பி.டி.பியும் அடக்க நினைக்கிறதா? 
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளா
ர்.
 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழில் இருந்து வெளியாகும் அரச சார்பு பத்திரிகையில் வெளியான அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 
 
 
அவர் மேலும் தெரிவிக்கையில் :-
 
எமது மக்களை அரசாங்கம் அடக்குகிறது, இராணுவம் அடக்குகிறது இன்னமும் ஈ.பி.டி.பியினர் அடக்க வேண்டுமென நினைத்தால் அக்கட்சியினர் படுதோல்வியை மட்டுமல்லாது பல ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடுமென தெரிவித்தார்.
 
இது தொடர்பிலான முழுமையான காணொலி இணைப்பு