பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2014

திருமாவளவன் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கவிதா (35) என்ற பெண்  டிஜிபி அலுவலகத்தில் நேற்று
ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், எனக்கு சொந்தமான 56 சென்ட் நிலம் கோவை கணபதி நகரில் இருந்தது. இந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய இருந்த நிலையில், அந்த இடத்தை விடுதலை சிறுத்தை செய்தித் தொடர்பாளர் வன்னியரசு அபகரிக்க முயன்று வருகிறார்.
மேலும், இது திருமாவளவன் தூண்டுதலிலேயே நடக்கிறது, இது தொடர்பாக வன்னியரசு கோவையில் வைத்து என்னை மிரட்டினார்.
இதுகுறித்து கோவை பொலிசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நீங்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதை பெற்றுக் கொண்ட கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்