பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2014

ஊவா மாகாண சபைத் தேர்தல் ; நாளை வர்த்தமானி அறிவிப்பு 
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 


வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த இரு வாரங்களில் வேட்பு மனுக்கள் தேர்தல்கள் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்படுமெனத் தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஊவா மாகாண சபை கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.