பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2014

தென்னிலங்கை பயணம் குறித்து அவதானம் தேவை – மேற்குநாடுகள் ஆலோசனை 
 தென்னிலங்கையின் அளுத்கம பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளில்
மாற்றம் செய்துள்ளன.
 
கடந்த ஜூன் மாத நடுப்பகுதியளவில் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் இரு மதப்பிரிவுகளுக்கு இடையில் கலவரங்கள் விளைந்திருந்தன. இவற்றின் விளைவாக உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.
 
ஏனைய பாகங்களிலும் ஆங்காங்கே பல சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கை செல்லும் பிரிட்டன் பிரஜைகள் கவனமாக இருக்க வேண்டுமென பிரிட்டன் அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
 
அளுத்கம, பேருவளை ஆகிய இரு இடங்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொதுவாக விடுமுறையைக் கழிக்கும் இடங்களாக இருப்பதால், இவற்றை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
 
அவுஸ்திரேலியாவின் பயண ஆலோசனையில், இந்தப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் தவிர்த்து, சகல சந்தர்ப்பங்களிலும் உள்ளுர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளத