பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூலை, 2014


ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐநா விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக. வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்த விசாரணை குழுவுக்கு வீசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது.
இதனையடுத்து ஐநா விசாரணை குழுவுக்கு இந்தியா வீசா வழங்க வேண்டும் என்று கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய அதிமுக, ஐ.நா. விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
கேள்வி நேரத்தின் போது தொடர்பாக பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, ஐ.நா. விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.