பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜூலை, 2014

பாழடைந்த வீட்டில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு 
 இறக்குவானை டெல்வின் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 
சந்தேக நபரை இறக்குவானை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தியதை அடுத்து ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
மேலும் சந்தேகநபர் பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி ஆஜர்படுத்தியபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
டெல்வின் பகுதியைச் சேர்ந்த சிறுமியை சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி கடத்திச்சென்று பாழடைந்த வீடொன்றுக்குள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.