பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2014


நல்லிணக்கமே இலங்கையின் முக்கியமான பிரச்சினை: பிரான்ஸ் தூதுவர்
சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்க என்பதே இலங்கையின் மிக முக்கியமான பிரச்சினை என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் போல் மஞ்சாவூ தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இலங்கை மக்களின் நண்பன் என்ற வகையில் இந்த விடயம் குறித்து மிகவும் கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கையில் மீண்டும் போர் நடக்காது என்பதால், இந்த விடயத்தில் முன்னேற்றம் காண்பதை இலங்கை  உறுதி செய்யும் என பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் நம்புகின்றன.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரம் அல்ல. பெரும்பான்மை இனம், எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம், மத தலைவர்கள் என அனைவரும் அதில் பங்குதார்களாக இருக்க வேண்டும்.
மிகவும் கடினத்திற்கு மத்தியில் கிடைத்த அமைதியை நிலைபெற செய்ய வேறு வாய்ப்புகள் இல்லை.
கொழும்பில் போன்ற மூன்று மொழிகளையும் பேசி அனைத்து மதங்களுக்கு மரியாதை வழங்கி சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வது போன்று ஏனைய இடங்களிலும் வாழ வேண்டும் எனவும் பிரான்ஸ் தூதுவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு வெளியிட்டு அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.