பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூலை, 2014


கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார்!- யாழ். நீதிமன்றம் தீர்ப்பு!
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றா இறப்பதற்கு முனனர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
மேற்படி வழங்கு இன்றைய தினம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த யுவதி நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாக தீர்ப்பளித்துள்ளதுடன், அவர் இறப்பதற்கு முன்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்பதனை எதிர்வரும் 9ம் திகதி அறிக்கை மூலம் வெளிப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கொன்சலிற்றாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருயை பெற்றோர் கூறியுள்ளதுன், அவருடைய இறப்பிற்கு இரு பாதிரியார்களே காரணம் எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இதேவேளை இன்றைய தீர்ப்பு தம்மை விரக்திக்கு உள்ளாக்கியிருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.