பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2014


நடராஜன் கைது! கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் நடவடிக்கை!

கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 


தஞ்சை மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பம் உருவாக்கியதற்கான தொகையில் பாக்கி உள்ளதை கேட்டதற்கு, நடராஜன் கொலை மிரட்டல் விடுத்தாக புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் சென்னை போலீசாரால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், குற்றாலத்தில் கைது செய்யப்பட்ட நடராஜன், விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயரிடம் கைது தொடர்பாக கேட்டபோது, தகவல் வருகிறது. ஆனால் நெல்லை போலீசார் அவரை கைது செய்யவில்லை என்றார்.