பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூலை, 2014

சட்டங்களை மீறுகிறது அவுஸ்ரேலியா : ஐ.நா அகதிகள் பேரவை கண்டனம்
அவுஸ்ரேலியாவில் நிர்க்கதியாகியுள்ள 153 இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் அந்நாடு சர்வதேச நியமங்களை

மீறும் விதமாக செயற்படுவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை குற்றம் சாட்டியுள்ளது . இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஒல்கர் டேர்க், தஞ்சமடைந்த 153 இலங்கையர்கள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசு சர்வதேச சட்டங்களை மீறும் விதத்தில் செயற்பட்டுவருகிறது என குற்றம் சுமத்தினார். நடுக்கடலில் வைத்து குறித்த புகலிட கோரிக்கையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் உண்மையான காரணங்களை கண்டறிய முற்படும் அவுஸ்ரேலிய அரசின் செயற்பாடு மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, அவுஸ்ரேலியாவின் இந்த செயற்பாட்டை சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.