பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2014


ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சிறுபான்மை கட்சிகளுக்கு பிரதியமைச்சு பதவிகளை வழங்கும் ஜனாதிபதி
சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதியமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய பிரதியமைச்சர் பதவிகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.