பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2014


கொள்ளையில் ஈடுபட்ட பிரதேச சபைத் தலைவர் கைது
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச சபையின் தலைவர் அமில ருவானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டதாக பிரதேச சபைத் தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தலைவர் அமில ருவானை அவிசாவளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பஸ் வண்டி ஒன்றை கொள்ளையிட்டதாக அமில ருவான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் தெஹியோவிட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் கெலும் என்பவரும் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று பிற்பகல் அவிசாவளை நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.