பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2014

அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால் 
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று  பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பொதுபலசேனாவே அளுத்கமை வன்முறைக்கு காரணம் என்று குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் இதற்கான காரணத்தை அவர்கள் அறியமுற்படவில்லை அளுத்கமை சம்பவங்கள் துரதிஸ்டவசமாக இடம்பெற்றவையாகும்.

எனவே அதற்காக பொதுபலசேனாவின் மீது குற்றம் சுமத்துவது அடிப்படையற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.