பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூலை, 2014


இறுதி யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பில் விசாரண
இறுதிக் கட்ட யுத்தத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கபட்ட ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைகள் இறுதி யுத்தத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் இருந்து பெறப்படவுள்ளதாக ஆணைக் குழுவின் தலைவர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திருகோணமலை புல்மோட்டை வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தை நேற்று மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது யுத்தத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜானாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட போது மக்கள் அளித்த சாட்சியங்களுக்கு அமைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் எச்.டபிள்யூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணைகள் மன்னாரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.