பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூலை, 2014



வெடிகுண்டு மிரட்டல்! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிர சோதனை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். 

வெடிகுண்டு இருப்பதாக காமாட்சி என்பவருக்கு தொலைபேசியில் தகவல் வந்ததாம். அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விரைந்தனர். அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.