பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2014


மாறுதடம் இயக்குனர் ரமணன்  கைதானாரா ?
யாழ்ப்பாணத்தில் இன்று " மாறுதடம்" என்ற புலம் பெயர் தமிழர் ஒருவர் இயக்கிய திரைப்படம் திரையிடப்பட்டிருந்த வேளையில் திடீரென்று அங்கு வந்த இனஅழிப்பு அரசின்
காவல்துறை திரைப்படத்தை நிறுத்தியதுடன் இயக்குனரையும்(ரமணன் )  விசாரணைக்கென்று அழைத்து சென்றிருக்கின்றனர்.

இந்தளவிற்கும் அந்த படத்தில் இனஅழிப்பு அரசுக்கு எதிராகவோ, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தோ எந்த கருத்தும் இல்லை என்று பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இனஅழிப்பு அரசு அதை தடை செய்திருக்கிறது. அது ஏனென்றால் தமிழர்களின் கலை பண்பாட்டை தடை செய்யும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு தொடர்ச்சி இது.
களம், புலம், தமிழகம் எங்கும் வியாபித்திருக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள், நடுநிலமை "வியாதிகள்" யாரும் இதற்கு எதிராக இந்தக் கணம் வரை குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும், இனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் படைப்புக்களுக்காக மட்டும் இவர்கள் வரிந்து கட்டும் மர்மம்தான் அப்பாவி தமிழனுக்கு இன்னும் புரியவில்லை.