பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2014

தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா 
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 
பாதுகாப்பு அமைச்சினால், அண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
 
இது தொடர்பாக உன்னிப்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஜென் பஸாகீ தெரிவித்துள்ளார்.
 
தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்கப்பட வேண்டுமெனவும்  இலங்கை மிக நீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டமைந்த நாடு என தெரிவித்த அவர், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்றன முடக்கப்படுவது இந்த ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.