பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014

டெல்லியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம்
டெல்லியில் நேபாளத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் வேலை தேடி டெல்லி வந்துள்ளார்.
இந்நிலையில், மெஹ்ருளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று மேலும் 5 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த நேபாள பெண் பொலிசில் அளித்த புகாரில், தன்னை பலாத்காரம் செய்த 6 பேரும் மது அருந்தி இருந்ததாகவும். தன்னையும் மது அருந்துமாறு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையில் நேபாள பெண்ணுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது