பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2014

 
தீவக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க த.தே.கூட்டமைப்பினால் உபகரணங்கள் கையளிப்பு
யாழ்.குடாநாட்டின் தீவக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தீவக விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் ரெலோ அமைப்பின் செயலாளர் கென்றி மகேந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் தீவகப் பகுதிக்குச் சென்று தீவகத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் விந்தனின் பாடசாலை நண்பர் ஒருவரின் உதவியுடன், ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டுள்ளார்.
மேலும் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, ஆகிய பகுதிகளில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கே மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,
தீவகத்தில் கடுமையான வறட்சி நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு, மக்களுடைய தேவைகளை தீர்த்துவைப்பதற்கு, வடக்கு மாகாணசபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் தீவகப் பகுதியின் குடிநீர் தேவை தொடர்பாக செப்ரெம்பர் மாதம் விசேட மாநாடு ஒன்று நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு சிலை எழுப்புவதற்கு யாருக்குத் தகுதி இருக்கென்பதனை திறக்கின்றவர்கள் சிந்திக்க வேண்டும்.
தீவுப் பகுதி மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாம் அறிந்திருக்கின்றோம். இதில் குறிப்பாக கடந்த காலங்களில் அச்சுறுத்தி அடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிலிருந்து நீங்களாகவே விடுபட்டு வந்திருக்கின்ற போதும், உங்களுக்கு தற்போதும் பல பிரச்சனைகளும் எதிர்பார்ப்புக்களும் இருக்கின்றன.
இதில் குடிநீர்ப் பிரச்சினையே மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. இத்தகைய குடி நீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாகாண சபையினூடக தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இந்த மக்களுக்கு குடி நீர் வழங்குதல் இதற்காண வாய்ப்பை எவ்வாறு உருவாக்கி கொள்ளுதல் மற்றும் இதற்குரிய திட்டங்கள் தொடர்பில் பல விடயங்களை உள்ளடங்கி நீர் நிலைகளை ஆராய்ந்து நீரை வழங்குவது தொடர்பிலேயே இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
தீவுப் பகுதிகளில் மண்கும்பாண் அல்லைப்பிட்டி சாட்டி அகிய நீர் நிலைகளை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்ற குறைபாடும் எம்மிடத்தே இருக்கின்றது.
அதே வேளை நீர் இல்லாத இந்தப் பகுதியிலேயே போத்தலில் நீரை எடுத்து விற்பதற்கும் அரசு அனுமதி வழங்கியிருந்த போதும் மாகாண சபை வந்ததன் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
ஆனால் இங்கு கடந்த காலங்களில் குறிப்பாக 1995 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலம் முதல் பல ஆண்டுகள் இரானுவ கடற்படை ஆக்கிரமிப்புக்குள்ளும் அரசுடன் இயங்கும் ஒட்டுக் குழுக்களின் ஆக்கிர பிடிக்குள்ளேயே இந்த மக்கள் இருந்துள்னர்.
இக் காலப் பகுதிகளில் எந்தவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத நிலையே இருக்கின்றது. இந்நிலையில் இத்தகைய அனைத்தையும் உணர்ந்து தான் மக்கள் சரியானதொரு முடிவை எடுத்து மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர்.
தேர்தல்கள் என்பது நடக்கின்றபோது நாம் நினைக்கின்றோம் வாக்குகளை பெறுவது என்று மட்டும். ஆனால் அப்படியல்ல, மக்கள் வழங்குவது தமது இனம் மற்றும் இருப்பு சார்ந்து ஆணை என்பதை வெளிபடுத்தப்படுகின்றது.
தமிழ் மக்கள் வழங்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் ஒரு ஆணையை வெளிப்படுத்துகின்றது. அதாவது எமக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது. வடக்கு கிழக்கு இணைந்த சரித்திர தாயக வரலாற்றுப் பூமியில் இறைமை அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையுடன் சமஷ்டி அடிப்படையிலையே சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்ற தாரக மந்திரத்தைத் தான் நாம் சொல்லி அதனையே கோரி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.