பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2014

ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகளின் உளவாளி? திடுக்கிடும் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளின் உளவாளி ஒருவார் இருந்ததாக முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராக இருந்த ஆர்.டி. பிரதான், ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவர் ஊடுருவி இருந்தார். அவர் ராஜிவ் பற்றிய தகவல்களை விடுதலைபுலிகளுக்கு பரிமாறியிருக்க கூடும்.
சோனியா காந்தியும் அதே கருத்தைக் கொண்டிருந்தார் ஆனால் அந்த உளவாளியை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொலை வழக்கில் பலர் சந்தேகிக்கப்பட்டு, சிலர் தண்டனை பெற்றுள்ளனர் என்றும், ஆனால் உண்மை இன்னும் வெளிவர வில்லை என நினைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.