பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014


விஜய் - மக்களின் குரல்!’கத்தி’ படத்தின் கதை! 

த்தி படம் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றியே தொடர்ந்து பேச்சு அடிபட்டுவரும் சமயத்தில், படத்தின் கதை பற்றிய முக்கியமான தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கத்தி திரைப்படத்தில் பிரபல குளிர்பான தொழிற்சாலையால் குடிநீர் மாசுபடுதலை எதிர்த்து களமிறங்குகிறாராம் ஹீரோ. 



பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் குரலாக விஜய்யின் குரல் ஒலிக்கும் என்றும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் இருக்கும் எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை இருப்பதால், கத்தி திரைப்படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனராம் படக்குழுவினரும். 

மேலும் சமீபமாக விஜய்க்கு ஆதரவாக பேசிவரும் சீமான் ‘கத்தி படம் விஜய் - முருகதாஸின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும்’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சில ஆண்டுகளாக விஜய்யின் எந்த படமும் பிரச்சனைகளை சந்திக்காமல் ரிலீஸாகவில்லை என்பதால், கத்தி திரைப்படத்தின் ரிலீஸை நோக்கியே திரையுலகத்தின் பார்வை திரும்பியிருக்கிறது. அதுமட்டுமா அஞ்சான் திரைப்படத்தைப் போலவே சமந்தா கத்தியில்(கவர்ச்சியில்) தாராளம் காட்டுவாரா? என்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.