பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2014


மல்லாவியில் தீ விபத்து 
 மல்லாவி நகர்ப் பகுதியில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன. 
 
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க பொதுமக்கள் எடுத்த முயற்சி கைகூடாத நிலையில் கடை முற்றாக எரிந்துள்ளது. 
 
மின்னொழுக்கே தீ பரவக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.