பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2014

வானில் இன்று இரண்டு நிலவுகள்
news
இன்று இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வதந்திகளையும் செவ்வாய்க் கோள் தொடர்பான இதர தவறான நம்பிக்கைகளையும் பொதுமக்கள் நம்பக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் பேராசிரியர் நா.மணி பொதுச் செயலாளர் ஸ்டீபன் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று இரவு வானில் செவ்வாய் கிரகம் முழு நிலவு போல பெரிதாக தெரியும் எனவே வானில் இரண்டு நிலவுகளை பார்க்கலாம் என வதந்தியான செய்திகள் வலைத் தளத்தில் உலா வருகின்றன.
கணினியின் துணைகொண்டு புனைவாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன. இவை வெறும் வதந்திகள் தான். பொதுமக்கள் யாரும் இதனை நம்பவேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.