பக்கங்கள்

பக்கங்கள்

2 ஆக., 2014


ஐ.நா விசாரணைக்குழு முன் நேரில் பார்த்த சாட்சியாளர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணைக்குழுவின் முன் நேரில் கண்ட சாட்சியாளர்கள் சிலர் சாட்சியமளிக்க உள்ளதாக தெரியவருகிறது.
போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நேரில் பார்த்த சாட்சியாளர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விசாரணையாளர்கள் முன் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் விசாரணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தவிர நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை விசாரணைக்குழுவிடம் வழங்கியுள்ளது.
அதேவேளை விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ள நேரில் பார்த்த சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் உருத்திரகுமாரன் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.