பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2014

மக்களே ஜாக்கிரதை: பொலிஸ் சீருடையில் இரகசிய கமெரா
சுவிஸ் பொலிசார் இனி சீருடைகளில் இரகசிய கமெராக்களை பொருத்திக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிசில் தினந்தினம் குற்றங்களும், தாக்குதல்களும் பொதுமக்களிடம் அதிகளவில் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
எனவே இதை தவிர்க்கவும் பொலிசாரின் சீருடையில் இனி இரகசிய கமெராக்கள் பொருத்தப்படும் என அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
தலைநகர் பெர்னில் முதலில் செயல்படவுள்ள இத்திட்டம் குறித்து பொலிசார் கூறுகையில், இவ்வாறு செய்வதன் மூலம் எங்களால் குற்றவாளிகளை எளிதாக கண்டுகொள்ள இயலும் என்றும் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இத்திட்டம் மற்றவர்களின் தனியுரிமையை பறிக்கும் விதத்தில் உள்ளதாக மற்றொரு தரப்பு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த இரகசிய கமெரா திட்டம் இந்த மாதம் இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.