பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2014

நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள கத்தி திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் விஜய் வீட்டை முற்றுகையிடப் போவதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை எந்த அமைப்பினரும் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இருப்பினும் இது குறித்த சர்ச்சை இன்னும் ஒயாததால், விஜய் வீடு முன்பாக போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.