பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014

சுவிஸ் பிரீபோர்க் இல் வீதியில் படுத்திருந்த இளைஞரை வாகனம் ஏற்றி கொலை செய்த பொலிஸ்

ளைஞர் ஒருவரை பொலிஸ் கார் ஒன்று ஏற்றி கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சுவிஸின் பிரீபோர்க் (Fribourg) மாகாணத்தில் பொலிஸ் கார் ஒன்று தெருவில் படுத்திருந்த 22 வயது இளைஞர் ஒருவர் மீது ஏறி சென்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் கார் நள்ளிரவு 2 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
காரை ஓட்டி வந்த 27 வயது பொலிசார் சரியாக காரை செலுத்த முயன்ற போதும் சாலையில் படுத்திருந்த அந்த இளைஞர் மீது கார் மோதியுள்ளது.
இளைஞரின் தலையில் கார் இடித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்றதால் A1 நெடுஞ்சாலை 4 மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது.