பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2014

பொது பல சேனாவிற்கு எதிராக பொது முன்னணியொன்றை உருவாக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள்

பொது பல சேனாவிற்கு எதிராக பொது முன்னணியொன்றை உருவாக்குவது குறித்த முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். பொதுபல சேனாவின்
பொதுசெயலாளர் ஞானார தேரரினால் அமைச்சர் ராஜி;த சேனரத்தின மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னரே மூத்த அமைச்சர்கள் இது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

ஞானசார தேரரினால் ஏனைய சில மூத்த அமைச்சர்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை கருத்தில் கொண்டும் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. பொது பலசேனாவின் பொதுச்செயலாளரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொது முண்ணணி ஒன்று அவசியம் என அமைச்சர்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை அமைச்சர்களுடன் மோத வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஞானார தேரரிற்கு அறிவுறுத்தியுள்ளமை; குறிப்பிடத்தக்கது.