பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2014


news
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்த் தாங்கி ஒன்று நேற்று இடிந்து வீழ்ந்துள்ளது.
சுமார் 150 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த நீர்தாங்கியானது நிர்மாண வேலைகளின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக இடிந்து வீழ்ந்திருக்கலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கடல் நீரை நன்னீராக்கி மக்களுக்கு நீர் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் இரண்டு நீர்த்தாங்கிகள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றுள் 70 வீத நிர்மாணப் பணிகள் நிறைவடைந்திருந்த நீர்த்தாங்கியொன்றே நேற்று மாலை இடிந்து வீழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் அருகிலிருந்த 3 வீடுகளும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
ஆயினும் இந்த விடயம் தொடர்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினருக்கு அறிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
-