பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2014

புதிய மனிதர்களை ஊடகவியலாளர்கள் உருவாக்க வேண்டும் 
 புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.

 
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
ஊடகங்கள் கொலைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள் சார்ந்த செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து  காலாசார விழுமியங்கள், பண்பாட்டு அடையாளங்கள், கலைச் செயற்பாடுகள் போன்ற விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
 
 கடந்த காலங்களில் சிங்கள, தமிழ் கலாசாரம் பரிமாறப்பட்டதாக இருந்தது. பேராசிரியர் சரத் சந்திராவின் மனமேஇ சிங்கபாகு ஆகிய இரண்டு நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் ஆற்றுகை செய்யப்பட்டன. இதனூடாக கலாசார பரிமாற்றங்கள் தமிழ் - சிங்கள மக்களுக்கிடையே இடம்பெற்றன. 
 
இவ்வாறான கலாசார பரிவர்த்தணைச் செயற்பாடுகள் மீண்டும் அதிகளவில் இடம்பெறவேண்டும். செய்திகளுக்கு அப்பால் சென்று மக்களை ஆறுதல்படுத்தக்கூடிய கலை அம்சங்களை எழுதக்கூடிய வகையில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.