பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2014

ரணில் - சம்பந்தன் இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவி;ன் அழைப்பிற்கு அமைய இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவளிப்பது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ரணில் கோரியுள்ளார்.
இதேவேளை, இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அதற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது எனவும் சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது பயனற்ற ஓர் முயற்சி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.