பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2014


சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி வேலூர் சிறையில் இன்று முதல் உண்ணாவிரதம் இருப்பதற்கு மனுக் கொடுத்துள்ளார்.
பெண்கள் சிறையில் உள்ள பிற கைதிகள் தன்னிடம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதனால் தான் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்கள் சிறையில் பலரும் சிறைக் காவலாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் கைதிகள் அவதியுறுவதாகவும், இதனைக் கண்டித்தே காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக நாளினி குறிப்பிட்டுள்ளார்.