பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2014

இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு - இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் இதுவாகும்