நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததுதான் இதுவரை அவர் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
அரசியலில் குதிக்க இதுவே சரியான நேரம் என்றும் அடுத்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி அரசியலில் ஆக்டிவாக இருக்கமாட்டார் எனவும் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுட்டி காட்டியுள்ளதாக தெரிகிறது.
பாஜகவின் அழைப்பை ஏற்று அக்கட்சியில் இணைந்துவிட வேண்டாம் என்றும் தனிக் கட்சி தொடங்கி அதிக தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் எனவும் குடும்பத்தினர் ரஜினியிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதுதான் சரியான வழியாக இருக்க முடியும் என்று நினைக்கும் ரஜினி இதுபற்றி தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |